சென்னையில் தாறுமாறாக ஓடிய மாநகர பேருந்து :ஓட்டுனரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

சென்னை தேனாம்பேட்டையில் தறி கெட்டு ஓடி மாநகர அரசு பேருந்து மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தில் மாநகர அரசு பேருந்து ஓட்டுனருக்கும்,பொது மக்களுக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சென்ட்ரளிலிருந்து திருப்போரூர் நோக்கி மாநகர பேருந்து சென்றது. தேனாம் பேட்டை காவல் நிலையம் அருகே பேருந்து சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆட்டோவில் மோதியது.

 

பின்னர் நடைபாதையில் ஏறி நின்றது. இந்த விபத்தில் மாலதி என்ற பெண் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இதில் மாலதி என்ற பெண்ணுக்கு கால் முறிந்தது. அதையடுத்து காயமடைந்த அனைவரையும் ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்திற்கு காரணமான ஓட்டுனர் குடிபோதையில் இருந்துள்ளார். இதனால் பொது மக்கள் பேருந்து ஓட்டுனரை சரமாரியாக தாக்கினர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தேனாம்பேட்டை போலீசார் விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply