நடிகர் சங்க தேர்தலில் ஆளுநர் தலையிட மறுப்பு

நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்படத்தை எதிர்த்து விஷால் தலைமையிலான அணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. வரும் 23 ஆம் தேதி நடைபெறவிருந்த நடிகர் சங்க தேர்தலை மாவட்ட பதிவாளர் நிறுத்தி வைக்க உத்தரவு இட்டார். பதிவாளர் உத்தரவை ரத்து செய்யுமாறு உயர்நீதிமன்றத்தில் முறையிட்ட விஷால் தரப்பினர் ,அவசர வழக்காக விசாரிக்க கோரினர். விஷால் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக கூறினார். சங்கரதாஸ் அணியினர் ஆளுநர் நடிகர் சங்க தேர்தலில் தலையிட மறுத்துவிட்டதாக கூறினர்.


Leave a Reply