கொடிவேரி அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கொடிவேரி அருகே விவாசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கொடிவேரி அணையில் உள்ள தடப்பள்ளி, அரக்கன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றனர். இந்நிலையில் பெருந்துறை கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் அணையிலிருந்து கூடுதலாக 2 கோடி லிட்டர் எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும், இந்த தண்ணீரை தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்த உள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

எனவே இத்திட்டத்தை கைவிடகோரி கொடிவேரி அணையை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் செந்தில் குமார் விவசாயிகளிடம் தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


Leave a Reply