சென்னையில் பஸ் டே கொண்டாடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் சஸ்பண்ட்

Publish by: --- Photo :


சென்னையில் தடையை மீறி பேருந்து நாள் கொண்டாடிய விவகாரத்தில் 9 மாணவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.வழக்கு பதிவை அடுத்து 9 மாணவர்களையும் இடைநீக்கம் செய்து பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டு இருக்கிறது.

 

பேருந்து நாள் கொண்டாடிய காட்சிகளில் திடீரென பேருந்து பிரேக் பிடித்த நிலையில் அதன் மேல் நின்று கொண்டிருந்தவர்கள் மொத்தமாக விழுந்தனர். இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதனால் 9 மாணவர்களையும் இடைநீக்கம் செய்து உள்ளனர்.


Leave a Reply