கூலித்தொழிலாளியின் வயது 120? ஆதார் அட்டையில் அரங்கேறிய கூத்து

மதுரையை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட ஆதார் கார்டில் அவரது வயது 120 என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் . கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த வருடம் ஆதார் அட்டை வழங்கப்பட்டது. இந்த நிலையில் வீடு கட்ட லோன் வாங்குவதற்காக ஆதார் அட்டையை வங்கிக்கு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது ஆதார் அட்டையில் மகாலிங்கம் 06.11. 1900 ஆண்டில் பிறந்ததாகவும், தற்போது 120 வயது ஆவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

120 வயதானதால் லோன் தர முடியாது என வங்கி நிர்வாகம் கூறியுள்ளது. தற்போது 45 வயது ஆகும் கூலித்தொழிலாளி மகாலிங்கம் 120 வயது என்று ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டிருப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பாக உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் முறையிட்டும் எந்த விட நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகிறார்.


Leave a Reply