சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென டைல்ஸ் கற்கள் உடைந்து விழுந்து விபத்து

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென டைல்ஸ் கற்கல் உடைந்து விழுந்த சம்பவத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அங்குள்ள மெட்ரோ ரயில் நிலைய மேடைக்கு செல்லும் வழியில் உள்ள சுவரில் டைல்ஸ் கற்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் 40 டைல்ஸ் கற்கல் திடீரென சரிந்து விழுந்தது. இந்த நேரத்தில் பயணிகள் யாரும் அங்கே இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

 

அவசர கதியில் டைல்ஸ் கற்களை பொருத்தியதால் தான் இந்த விபத்து நடந்து இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தின் மேற்புறம் உள்ள தானியங்கி நடைமேடை அருகே ஒட்டப்பட்டிருந்த 5டைல்ஸ் கற்கல் கீழே வீழ்ந்தன.இவ்வாறு மெட்ரோ ரயில் நிலையத்தில் அலட்சியத்தால் ஏற்படும் விபரீதங்களால் பயணிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.


Leave a Reply