எனக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதில் தமிழ் எழுத்துகளை பொறிக்க வேண்டும்: எழுத்தாளர் யூசுஃப்

Publish by: --- Photo :


தமக்கு வழக்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதில் இந்தி எழுத்துக்கு பதிலாக தமிழ் எழுத்துகளை பொறிக்க வேண்டுமென எழுத்தாளர் யூசுஃப் வலியுறுத்தியுள்ளார். கன்னியாகுமாரி மாவட்டம் குளச்சலை சேர்ந்தவர் யூசுஃப். மலையாளத்தில் எழுதப்பட்ட நாவலை திருடன் மணியின்பிள்ளை என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்தார். இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பு பிரிவில் யூசுஃப்க்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.

 

இந்நிலையில் தமக்கு வழங்கப்பட்ட விருது கேடயத்தில் இந்தி எழுத்துக்கு பதிலாக தமிழ் எழுத்துக்களை பொறிக்க வேண்டுமென சாகித்திய அகாடமி அமைப்பை அவர் வலியுறுத்தியுள்ளார். தமக்கு வழக்கபட்ட விருதில் தமது பெயர் கூட எங்கிருக்கிறது என்பதை அடையாளம் காண முடியவில்லை என கூறினார். தமிழ் எழுத்து பதிக்கபட்ட சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட வேண்டும் என்றும். யூசுஃப் கேட்டுக் கொண்டுள்ளார்.