கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் அணில்கள்: குழந்தை போல் வளர்க்கும் பெண்

காஞ்சிபுரத்தில் பெண் ஒருவர் தனது பிள்ளைகள் போல் வளர்த்துவருவது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாய், பூனை, பறவைகள் போன்றே அணிலை செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார். பழைய ரயில் நிலையம் அருகே வசித்து வரும் சாமுண்டேஸ்வரி, ஜெராக்ஸ் கடை ஒன்றில் பணி செய்து வரும் அவர் வளர்த்து வரும் அணில்கள் மூன்றும் சொன்னதை சொன்னபடி கேட்டு வளர்ந்து வருகின்றன.

 

சாமுண்டேஸ்வரியுடன் சேர்ந்து உணவு அருந்தும் இவைகளையும் டிக் டாக் விட்டுவைக்கவில்லை. ஆட்டு இறைச்சி, மீன் ,பால் உள்ளிட்டவைகளை விரும்பி உண்ணும் இவைகள் பணிமுடிந்து வீடு திரும்பும் போது தன்னை வரவேற்க தயாராக இருக்கும் என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.


Leave a Reply