தமிழகத்தின் 15 வது மாநகராட்சி : ஆவடி

தமிழ்நாட்டின் 15 வது மாநகராட்சியாக ஆவடி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 14 மாநகராட்சிகள் உள்ளன. இந்த நிலையில் 15 வது மாநகரட்சியாக ஆவடியை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆவடி மாநகராட்சியில் பூந்தமல்லி ,திருவேற்காடு ஆகிய நகராட்சிகளும்,திருநின்றவூர் பேரூராட்சியும் இடம் பெற்றுள்ளது.

 

நெமிலிச்சேரி,நசரத் பேட்டை, வானகரம் உள்ளிட்ட 11 கிராமபஞ்சாயத்துக்கள் அடங்கும். ஆவடி மாநகராட்சியாக மாறும் போது குடிநீர், கழிவு நீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படும். அதே நேரத்தில் சொத்து வரி, குடிநீர் வரி அதிகரிக்கும். மக்கள் தொகையின் அடிப்படையில் ஆவடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. மொத்தம் 148 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டது இந்த புதிய ஆவடி மாநகராட்சி.


Leave a Reply