திருவண்ணாமலை அருகே உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு

Publish by: --- Photo :


திருவண்ணாமலை அருகே உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மின்கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உயர் மின்கோபுரத்தில் மின் இணைப்பு வழங்கும் பணியில் தனியார் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டனர்.இதனையடுத்து, கிராம விவாசாயிகள் ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தனர்.

 

மேலும் பன்னீர்செல்வம், ஏழுமலை ஆகிய விவாசாயிகள் மின் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்திற்கு சென்ற திருவண்ணாமலை டி‌எஸ்‌பி.அண்ணாதுரை மற்றும் காவல் கண்காணிப்பாளர் வனிதா விவசாயிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பிறகு உரிய இழப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்கிய பிறகே பணி தொடரப்படும் என்று கூறிய காவல் கண்காணிப்பாளர் வனிதா வேலையை நிறுத்த உத்தரவிட்டார்.


Leave a Reply