தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியான 1,627 முதுநிலை பட்டதாரி, மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் தற்காலப் பெயர் பட்டியலை பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ளது.பட்டியலில் உள்ளவர்களின் பணிக்காலம் மற்றும் சுயவிவர குறிப்புகளை சரிபார்த்து சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர், இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். இறுதிபட்டியலில் உள்ளவர்கள் தரவரிசை அடிப்படையில் உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.