தண்ணீர் தட்டுப்பாட்டால் ஓட்டல்கள் மூடப்படவில்லை! ஓட்டல் உரிமையாளர்கள்

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்கள் மூடப்படுவதாக வெளியாகும் தகவல் தவறானது என தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியுடன் தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்கத்தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது தொடர்பாக ஆலோசனையின் போது விவாதிக்கப்பட்டது.தமிழக அரசின் நடவடிக்கை காரணமாக ஓட்டல்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கிறது என்றார்.


Leave a Reply