சோனியா காந்தி தலைமையில் கூட்டத்தொடருக்கு அணி திரளும் எதிர்க்கட்சிகள்

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆளுங்கட்சிக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நிலைப்பாடு குறித்து முடிவு செய்வதற்காக எதிர்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. அப்போது முக்கிய விவாகரங்களில் அரசுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நிலைபாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

 

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்காக ஓட்டு மொத்த எதிர் கட்சிகளும் ஒன்றாக அணி திரள்வது இதுவே முதல்முறையாகும். இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதா உள்ளிட்ட பல முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply