கும்பகோணம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை

கும்பகோணம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யபட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொற்கை கிராமத்தை சேர்ந்த வசந்தி,அவரது கணவர் பாண்டியன் மற்றும் மகன் சந்தோஷ் வெளியூரில் பணிபுரிவதால் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்களால் அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

 

தகவலின் பேரில் நிகழ்விடம் சென்ற காவல் துறையினர்  உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கொலையாளிகள் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply