மு.க. ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

Publish by: --- Photo :


முதல்வரின் டெல்லி பயணம் பற்றி முழுமையாக அறியாமல் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவதூறு பரப்பிவருவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் நடந்த நிதி ஆயுக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று ஆக்கபூர்வமான திட்டங்களை கேட்டுப் பெறாமல் திரும்பி விட்டதாக ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் பயணத்தை விமர்சித்தது , மு.க ஸ்டாலின் குதர்க்க புத்தியையும் கோயபல்ஸ் முயற்சியையும் காட்டுவதாக உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

 

மேலும் தமிழகத்திற்கு தேவையான நல்ல திட்டங்கள் தொடர்பாக நிதி ஆயுக் கூட்டத்தில் வலியுறுத்தியதாகவும், பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக கோரிக்கை வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் திமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்படாத திட்டங்களை அதிமுக ஆட்சியில் நிறைவேற்றி வருவதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.


Leave a Reply