போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் ஊர்ந்து சென்ற முதலை

Publish by: --- Photo :


மெக்ஸிகோவில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையின் குறுக்கே முதலை ஒன்று சாவகாசமாக ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஜுவாங்க்ஜோ என்ற இடத்தில் அந்த காலைபொழுதில் , பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த நேரத்தில் அருகில் இருந்த ஏரியில் இருந்து வெளியேறிய 10 அடி நீளம்கொண்ட முதலை ஒன்று சாலையின் குறுக்கே கடந்து சென்றது.

 

சில அடி தூரம் ஊர்ந்து சென்ற அந்த முதலை திடீரென நடு சாலையில் படுத்துக்கொண்டது. இதனால் முதலையை படம் பிடிக்க சிலர் முயன்றதாலும் ஜுவாங்க்ஜோ பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Leave a Reply