அதிநவீன வசதி கொண்ட ஒன் பிளஸ் செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

Publish by: --- Photo :


திரையரங்குகளில் பயன்படுத்தக்கூடிய ஸ்பீக்கர் கொண்ட அதிநவீன ஒன் பிளஸ் செல்போனை பூர்வீகா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பூர்வீகா நிறுவனம் புதிய மாடல் செல்போன்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அதி நவீன ஒன் பிளஸ் போனை பூர்வீகா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

ஒன் பிளஸ் செல்போன் மத்த செல்போன்களை விட அதிக கவர்ச்சியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. செல் போனின் முன்னும் பின்னும் அதிநவீன வசதி கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிவேகமாக சார்ஜ் நிரம்பக்கூடிய இந்த செல்ஃபோன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வடிவமைக்க்ப்பட்டுள்ளது.

 

இந்த ஒன் பிளஸ் போனை சென்னை அண்ணா நகரில் பூர்வீகா நிறுவனத்தின் நிர்வாக இயக்க அதிகாரி யுவராஜ் மற்றும் ஒன் பிளஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் விகாஸ் அகர்வால் ஆகியோர் அறிமுகப்படுத்தினர். இதில் பூர்வீகா நிறுவன கிளைஅதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Leave a Reply