விவாசய நிலத்தை சமன்படுத்தும் பணியின் போது ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு

Publish by: --- Photo :


புதுக்கோட்டை மாவட்டத்தில் விவாசயி ஒருவர் நிலத்தை சமன் செய்யும் பணியின் போது 17 ஐம்பொன் சிலைகளும் கண்டெடுக்கபட்டுள்ளன. முத்தையா என்பவருக்கு சொந்தமான நிலத்தை சமன் செய்யும் பணிகள் ஜெ‌சி‌பி எந்திரத்தின் உதவியுடன் நடைபெற்று வந்தன. அப்போது அங்கிருந்த மரம் ஒன்றை அப்புறப்படுத்த முயன்ற போது அதன் வேர்பகுதியில் 2 சிலைகள் கிடந்துள்ளன.

 

உடனடியாக அவர்கள் வருவாய்த்துறைக்கும், தொல்பொருள் துறையினருக்கும், தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த அதிகாரிகள் 2 சிலைகளையும் மீட்டு சுற்றியுள்ள மற்ற இடங்களையும் ஜெ‌சி‌பி எந்திரத்தின் உதவியுடன் தொண்டி பார்த்துள்ளனர். அவ்வாறு தோண்ட தொண்ட அடுத்தடுத்து சிலைகள் கிடைத்துள்ளன. இதுவரை 17 ஐம்பொன் சிலைகளும், சிலை பீடம் ஒன்றும் கிடைத்துள்ள நிலையில் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


Leave a Reply