மனநலம் பாதித்தவரின் வயிற்றிலிருந்து 800 கிராம் இரும்பு பொருட்கள் அகற்றம்

ராஜஸ்தானில் கடும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வந்தவரின் வயிற்றிலிருந்து நாணயங்கள், சாவிகள் மற்றும் சைன்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். உதய்பூரை சேர்ந்த மன நலம் பாதித்த ஒருவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டதன் காரணமாக குடும்பத்தினர் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

வயிற்று பகுதியை மருத்துவர்கள் எக்ஸ் ரே எடுத்து பார்த்தபோது வயிற்றில் இரும்பு ஆணிகள், சாவிகள், நாணயங்கள் மற்றும் துரு பிடித்த சைன்கள் என 800 கிராம் எடையிலான பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட 4 பேர் கொண்ட மருத்துவர் குழு வெற்றிகரமாக வயிற்றிலிருந்த இரும்பு பொருட்களை அகற்றினர். கடந்த மாதம் இதே போல மனநலம் பாதித்த நோயாளி ஒருவரின் வயிற்றிலிருந்து 116 ஆணிகள் கண்டு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply