மகாராஷ்டிர மாநிலத்தில் நவிமும்பை பகுதியில் வெடிகுண்டு கண்டுபிடிக்கபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மும்பையில் பள்ளிக்கு அருகே மர்ம பொருள் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் நடத்திய சோதனையில் அது வெடிகுண்டு என்பது தெரிய வந்தது.
இதையடுத்து கடிகாரத்துடன் இணைக்கப்பட்டிருந்த அந்த வெடிகுண்டை வெடிகுண்டு நிபுணர்கள் பத்திரமாக எடுத்துச்சென்றனர். இந்த வெடிகுண்டை வைத்தது என்பது குறித்து விசாரித்து வருவதாகவும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்து வருவதாகவும், நவி மும்பை காவல் துறை ஆணையர் சஞ்சய் தெரிவித்துள்ளார்.