மெக்ஸிகோ கடல் பகுதியில் நீலத் திமிங்கலத்தை கண்ட சுற்றுலா பயணிகள்

மெக்ஸிகோ கடல் பகுதியில் திமிங்கலம் ஒன்று சுற்றுலா பயணிகளை தொடுவதற்கு அனுமதித்தது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. கடல் பகுதியில்,கடல் ஆராய்ச்சியாளர்களும், சுற்றுலா பயணிகளும் சென்று கொண்டிருந்தனர். அப்போது உலகின் மிகப்பெரிய பாலூட்டியின் இனமான நீலத்திமிங்கலம் ஒன்று கடலின் மேற்பரப்பில் நீந்தி கொண்டிருந்தது.

 

இதனை கண்ட சுற்றுலா பயணிகள் திமிங்கலத்தை தொட்டு பார்க்க ஆர்வம் கொண்டனர். இதனையடுத்து தாங்கள் வந்த படகினை திமிங்கலத்திற்கு அருகில் செலுத்திய அவர்கள் ஆசை தீர திமிங்கலத்தை தொட்டு பார்த்துக்கொண்டனர். அதுவரை அந்த திமிங்கலமும் அமைதியாக இருந்து ஒத்துழைப்பு கொடுத்தது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply