வாளால் மிரட்டிய ஆட்டோ ஓட்டுநரையும், மகனையும் அடித்து துவைத்த போலீசார்

டெல்லியில் சீக்கிய ஓட்டுனரையும், அவரது மகனையும் தாக்கிய 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். டெல்லியில் மற்றொரு வாகன ஓட்டியுடன் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுனர் சரப்ஜத் சிங் போலீசாரை விரட்டி அடித்தார். இந்நிலையில் அவரை சுற்றி வளைத்த போலீசார் சரப்ஜத் சிங்கையும் , அவரது மகனையும் சரமாரியாக தாக்கினர்.

 

போலீசாரின் இந்த செயலை கண்டித்து டெல்லியில் ஒரு பகுதியில் ஏராளமான சீக்கியர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.


Leave a Reply