விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே மகன் தாக்கி காயமடைந்த தந்தை உயிரிழந்தார். தென்னை மரம் ஏறும் தொழிலாளியான நல்லதம்பி என்பவர் சேலம் ஆத்தூரில் வசித்து வந்த பேரனை கூட்டிவந்து தன்னுடன் வைத்து வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நல்லதம்பியின் வீட்டிற்கு வந்த அவரது மகன் பாண்டி தன் மகனை தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுள்ளார்.
அதற்கு நல்லதம்பி மறுக்கவே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் சாலையில் விழுந்த நல்லதம்பிக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்துள்ள நல்லதம்பி தற்போது உயிரிழந்துள்ள நிலையில் அவரது மகன் பாண்டியன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.