வரும் 2027 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்திவிடும்-ஐ.நா. ஆய்வறிக்கை

வரும் 2027 ஆம் ஆண்டு சீனாவைவிட அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை சார்பில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அடுத்த 30 ஆண்டுகளில் உலக மக்கள்தொகை 2 பில்லியன்கள் அதிகரிக்கும் என்றும், தற்போது 7.7 பில்லியனாக இருக்கும் மக்கள் தொகை 2050 இல் 9. 7 பில்லியனாக உயர்ந்து இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்த ஆண்டில் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளில் மற்றும் இருப்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த விதத்தில் சீனாவின் மக்கள் தொகையை விட இந்தியாவின் மக்கள் தொகை 2027 ஆம் ஆண்டே அதிகரித்திருக்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Leave a Reply