நகராட்சி குடிநீர் குழாய்களிலிருந்து சட்ட விரோதமாக நீர் பெற்ற விவகாரம்

கடலூரில் நகராட்சி குடிநீர் குழாய்களிலிருந்து சட்ட விரோதமாக நீர் உறிஞ்சியதாக கூறி சுமார் 50 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மின் மோட்டார்களை பயன்படுத்தி சட்ட விரோதமாக நீர் உறிஞ்சபடுவதாக கிடைத்த தகவலை அடுத்து பாலாஜி நகர், லட்சுமி நகர் மற்றும் வண்டிப்பாளையம் பகுதிகளில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

 

அப்போது அப்பகுதிகளில் உள்ள வீடுகளிலிருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மீண்டும் இதே போல மின் மோட்டார்களை பயன்படுத்தி சட்ட விரோதமாக தண்ணீர் எடுப்பது தெரிய வந்தால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.


Leave a Reply