கடும் வெயில்,ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் ஊரக இடத்தில் உள்ள குளத்தில் செத்துகிடக்கும் மீன்களை அப்புறப்படுத்துமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அங்குள்ள தாமரை குளம் ஒன்றில் ஏராளமான மீன்கள் குவியல் குவியலாக செத்து மிதந்து வருகின்றன.கடுமையான வெயில், ஆக்ஸிஜன் குறைபாடு காரணமாகவே மீன்கள் செத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் செத்துகிடக்கும் மீன்களால் அப்பகுதியே கடுமையான துர்நாற்றம் வீசுவதாக புகார் கூறும் பொது மக்கள் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply