மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ,முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு!

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்து இருக்கிற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மற்ற அமைச்சர்கள் மலர் தூவி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட உள்ள கட்டுமான பணிகளின் வேலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அந்த பணியை ஆய்வு செய்வதற்காக மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார்.

ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டுவதற்கு தமிழக அரசு சார்பில் 50 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் திட்டத்தை பழனிசாமி தொடங்கி வைத்தார். 10க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள், 50 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஷிப்ட் அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply