நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க கோரி விஷால் வழக்கு

Publish by: --- Photo :


நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க சென்னை காவல் துறை ஆணையருக்கு உத்தரவிட கோரி நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என பட்டினம்பாக்கம் காவல் நிலைஆய்வாளர் சத்யா ஸ்டுடியோ நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த கடிதத்தின் அடிப்படையில் காவல் துறை அனுமதி பெற்றால் தான் தேர்தலை நடத்த முடியும் என்று சத்யா ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்துள்ளதாக விஷால் மனுவில் குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க கோரி ஏற்கனவே சென்னை காவல் ஆணையரிடம் அளித்த கோரிக்கை மனு நிலுவையில் இருப்பதால் அதை பரிசீலித்து உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடவேண்டும் என விஷால் மனுவில் கூறியுள்ளார். இந்த மனு செவ்வாய் கிழமை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது
.


Leave a Reply