மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதா நிறைவேறினால் மிகப்பெரிய மாற்றங்களை நிகழ்த்தும் என எதிர்பார்ப்பு

மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா நிறைவேறினால் போக்குவரத்து விதிகளில் நிறைய மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சாலைகள் மேலும் பாதுகாப்பு உடையதாக மாறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஓட்டுனர் உரிமம், வாகனப்பதிவு ஆகியவற்றிற்கு ஆதார் கட்டாயம் என்னும் விதிகளில் மாற்றமில்லை என்றாலும் ஆன்லைன் மூலம் ஓட்டுனர் உரிமம் பெறுவது உள்ளிட்ட புதிய வசதிகளும் அமல்படுத்தப்பட உள்ளன. அதன் மூலம் நாடு முழுவதும் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு ஆகியவை ஒரே மாதிரியான நடைமுறையில் வழங்கப்படும். போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் , அதனை மாநில அரசுகள் 10 மடங்கு வரை அதிகரிக்கவும், இந்த மசோதா வழிவகை செய்கிறது.

 

மேலும் குறைபாடுடைய வாகன பாகங்களை தயாரிப்பு நிறுவனங்கள் திரும்ப பெறுதல், சிறுவர்கள் வாகனங்களை இயக்கி ஏற்படுத்தும் விபத்துகளுக்கு வாகன உரிமையாளர்கள் பொறுப்பு ஏற்பது ,விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுபவர்களை வழக்குகள், விசாரணைகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு மூக்கிய அம்சங்களும், மசோதாவில் இடம் பெற்றுள்ளன.


Leave a Reply