தேர்தல் என்றாலே அரசியல் தான்: நடிகர் விஷால்

திண்டுக்கலில் உள்ள நாடக நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களிடம் பாண்டவர் அணியைச் சேர்ந்த நடிகர் விஷால் மற்றும் நடிகர் நாசர் ஆகியோர் இன்று வாக்கு சேகரித்தனர். தேர்தல் என்றாலே அரசியல் தான் என நடிகர் விஷால் கூறினார். எல்லா அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களாக இருப்பதால், தேர்தலில் நிறைய அரசியல் நடக்கும் என நடிகர் விஷால் தெரிவித்தார்.

 

எதிரணியினர் தங்களுடன் நேற்று வரை ஒரே தட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த நண்பர்கள் என்றும் இன்றைக்கு அவர்களுக்கு புது கருத்து தோன்றியுள்ளது எனவும் கூறினார். நாங்கள் எதிரிகளோ , போட்டியாளர்களோ கிடையாது என்றும், சூழல் அமைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.


Leave a Reply