சேலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யபட்டன. சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. ஜனவரி 1 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. சேலம் மாநகராட்சி பகுதிகளில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

 

இந்தசோதனை பொருத்தவரையில் ஏராளமான கப்புகளும், பிளாஸ்டிக் பைகளும் அங்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக்குகளுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று முறை இவ்வாறு கண்டறியப்பட்டால் கடையை நிரந்தரமாக மூட உத்தரவு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply