அரசு பொது சேவை மையம் மூலம் ஆன்லைனில் கட்டணங்கள் செலுத்துவது 5 ஆண்டுகளில் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. இணையம் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள தெரியாதவர்கள் அதிகம் வசிக்கும் கிராம பஞ்சாயத்துகள், புற நகரங்களில் அரசு பொது சேவை மையம் தொடங்கப்பட்டது. அதில் கடந்த ஆண்டு மட்டும் மின் கட்டணங்கள் ஆன்லைனில் செலுத்தும் சேவையை ஒரு கோடி முறை மக்கள் பயன்படுத்தி உள்ளனர்.
அதே போல் காப்பீட்டுக்கான பணம் செலுத்தும் சேவையை 17 லட்சம் பேர் பயன்படுத்தி உள்ளனர். இதே போல் ரயில் டிக்கெட் முன்பதிவு, பொது தேர்வு விண்ணப்பங்களுக்கான பரிமாற்றங்களும், முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்து உள்ளன. மொத்தமாக கடந்த ஆண்டு மட்டும் 28,243 கோடி ரூபாய் பரிவர்த்தனை அரசு பொது சேவை மையங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதுவே 2014 ஆம் ஆண்டு 1,558 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.