மேஜிக் செய்வதாக கூறி கங்கைக்குள் மூழ்கிய மேஜிக் நிபுணர் மாயம்

மேஜிக் செய்வதாக கூறி கங்கை நதிக்குள் இறங்கி மேஜிக் நிபுணர் ஒருவர் நீரில் மூழ்கி மாயமாகி உள்ளார். விதவிதமான மேஜிக் சாகசங்கள் நிகழ்த்துவதில் வித்தகரான சஞ்சல் என்பவர் மந்த்ரா எனும் புனைப்பெயரில் ஏராளமான மேஜிக்குகளை நிகழ்த்தியுள்ளார். யு-ட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வந்தார். தாம் செய்த மேஜிக்குகளை வீடியோவாக அதில் பதிவிட்டு வந்தார்.

 

இந்நிலையில் தனது உடலை இரும்புச் சங்கிலி மற்றும் கயிறுகளால் கட்டிக்கொண்டு கங்கை நதிக்குள் விழுந்து அவற்றை அவிழ்த்துக்கொண்டு வெளியேறும் மேஜிக்கை செய்யும் முடிவை எடுத்தார். அதன்படி கங்கைக்குள் அவர் இறங்கினார். உடனடியாக வெளியேறிவிடுவார் என எதிர்பார்த்த நிலையில் நீருக்குள்ளேயே அவர் மாயமாகி உள்ளார். மேஜிக் நிபுணர் காணாமல் போனது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில்,போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Leave a Reply