எரிசாராயம் கடத்தியதாகக்கூறி 3 பேர் கைது

Publish by: --- Photo :


வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே எரிசாராயம் கடத்தியதாக கூறி 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து சோதனையில் ஈடுபட்ட போலீசார் எரிசாராயம் வைக்கப்பட்டிருந்த மினி லாரியை மேம்பாலம் அருகே வைத்து மடக்கி பிடித்து சோதனையிட்டனர்.

 

அப்போது 40 கேன்களில் சுமார் 1400 லிட்டர் எரிசாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Leave a Reply