மயிலாப்பூரில் இளைஞர் ஓட ஓட அரிவாள் வெட்டு !

சென்னை மயிலாப்பூரில் இளைஞர் ஓட ஓட அரிவாளால் வெட்டிய சி‌சி‌டி‌வி காட்சிகள் வெளியாகியுள்ளன. மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பாங்க் உள்ளது. அதற்கு எதிரே
இரு வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவரை ஆட்டோவில் வந்த 2 நபர்கள் வழி மறித்துள்ளனர். அப்போது மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை கொண்டு சாலையில் வைத்தே சரமாரியாக தலை, கழுத்து, மார்பு போன்ற பகுதிகளில் வெட்டியுள்ளனர்.

 

இதனால் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த வழியாக வந்த சக வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அப்போது அப்படியே சாலையில் பொது மக்களும் உறைந்து நின்றனர். அங்கு வெட்டப்பட்ட நபர் சரிந்து விழுந்ததால் சாலையிலும் ரத்தம் ஓடப்பட்டது.

 

உடனடியாக மயிலாப்பூர் போலீசார் சம்பவம் அறிந்து வந்து வருவதற்குள் அங்கு வெட்டிய இரு நபர்களும் ரத்தக்கறை படிந்த அறிவாளுடன் ஆட்டோவில் ஏறி சென்றனர். போலீசார் உயிருக்கு துடித்து கொண்டிருந்த அந்த நபரை ராயபேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.இது முன்விரோதம் அடிப்படையில் நடந்துள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply