கடந்த ஆண்டு நடைபெற்ற முத்தரப்பு தொடரில் பங்களாதேஷ் உடனான இறுதிபோட்டி அது. இந்திய அணி அப்போட்டியில் வெற்றி பெற்றுஇருந்தாலும் விஜய் ஷங்கருக்கு அது சற்று மோசமான போட்டியாக அமைந்தது.காரணம் போட்டியின் தொடக்கம் முதல் இறுதி வரை பேட்டிங்கில் அதிரடி காட்ட முடியாமல் தடுமாறினார் விஜய் சங்கர்.
அவருக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்குமா என்று அனைவரும் சந்தேகித்தனர். ஆனால் கடின உழைப்பால் மீண்டும் அணியில் இணைந்தார் விஜய் சங்கர். இந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்த்ரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியின் கடைசி ஓவரில் தன்னை நிரூபிக்க மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. நேர்த்தியாக பந்து வீசி இந்திய அணியை வெற்றி பெறசெய்தார் விஜய் சங்கர்.
அப்போட்டியின் செயல்பாடே அவர் உலககோப்பை இந்திய அணியில் இடம் பெற செய்தது என்றால் மிகை அல்ல.உலககோப்பை அணியில் இடம் பெற்று இருந்தாலும் பிளேயிங் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உலக கோப்பை பயிற்சி போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார் விஜய் சங்கர் இதனால் முதல் இரு போட்டிகளில் பிளேயிங் லெவனில் அவர் இடம்பெறவில்லை. இந்நிலையில் காயம் காரணமாக தவான் தொடரில் இருந்து நீக்கப்பட வாய்ப்பை பயன்படுத்தி பேட்டிங் மற்றும் பௌலிங்கில் திறம்பட செயல்பட்டு வரும் போட்டிகளில் தனது இடத்தை தக்க வைப்பாரா என பார்ப்போம்.