குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வீணாகும் குடிநீர்

Publish by: --- Photo :


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீரூற்று போல தண்ணீர் பீச்சி அடித்து வீணாகி வருகிறது. அருப்புகோட்டை நான்கு வழிச்சாலை ரயில்வே மேம்பாலம் தொட்டியங்குளம் பிரிவில் தாமிரபரணி கூட்டு குடிநீர் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது.

 

இதனால் கடந்த 4 நாட்களாக குடிநீர் நீரூற்று போல பீச்சி அடித்து வெளியேறி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தண்ணீர் இவ்வாறு வீணாகி வருவதால் நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் குழாயை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.