விவசாயி தற்கொலை: கடன் தவணையை செலுத்த வங்கி ஊழியர்கள் நெருக்கடி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தனியார் வங்கி ஊழியர்கள் கடனை திருப்பிச் செலுத்த கோரி நெருக்கடி கொடுத்ததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் கூறி வருகிறார்கள். விவசாயி ஜெயக்கொடி என்பவர் தனியார் வங்கியில் நிலத்தை அடமானம் வைத்து 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்.

 

ஒரு தவணை மட்டும் செலுத்தபட்ட நிலையில் அவர் கடன் தொகையை செலுத்த கோரி வங்கி ஊழியர்கள் நேரிலும் தொலை பேசியிலும் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தனர். நிலத்தை ஜப்தி செய்ய போவதாக வங்கி ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டி விட்டு சென்ற நிலையில் விவசாயி ஜெயக்கொடி கடந்த வியாழக்கிழமை தற்கொலைக்கு முயன்றதாக உறவினர்கள் கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் தேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயக்கொடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Leave a Reply