திருத்தணியில் 111 டிகிரி வெப்பம் பதிவு

Publish by: --- Photo :


தமிழகத்தில் கடுமையான வெயில் நிலவி வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 111 டிகிரி அளவிற்கு வெப்பம் பதிவானதால் பொது மக்கள் வீட்டுக்குள் முடங்கினர். தமிழகத்தில் கடுமையான கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் முடிவடைந்த நிலையிலும் கடந்த சில நாட்களாக அதிக அளவில் வெயில் சுட்டெரித்து வருகிறது.

 

குறிப்பாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கடந்த சில தினங்களாக 105 டிகிரியாக இருந்த வெயில் கடந்த 2 தினங்களாக 111 டிகிரியாக அதிகரித்துள்ளது. காலை 10 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியே தலை காட்டமுடியாத நிலை உள்ளது. இதனால் மக்கள் வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது.


Leave a Reply