உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் இடையே போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை அரும்பாக்கம் ஸ்கைவாக் வணிக வளாகத்தில் ரசிகர்கள் கண்டு ரசித்து வருகின்றனர். ரோஹித் ஷர்மா பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தார். இந்த உலக கோப்பை தொடரில் இரண்டாவது சதம் அடித்துள்ளார் ரோஹித் ஷர்மா. குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் கிரிக்கெட்டை ரசிகர்கள் கண்டு கழித்து வருகின்றனர்.
ரோஹித் ஷர்மா ஒவ்வொரு முறை சதம் அடிக்கும் போதும் அவர்கள் எழுந்து நின்று கைகளை தட்டி ஆரவாரம் செய்கின்றனர். 33 ஓவர் முடிவில் 191 ரன்கள் எடுத்து இருக்கிறது இந்தியா. மக்களின் எதிர்பார்ப்பும் இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள போட்டியில் இந்தியா விட்டுக்கொடுக்காது என்றும், அதே நேரத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்றும் கூறினர்.