நடிகர் சங்க தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரியான ஓய்வு பெற்ற அதிகாரியான பத்மநாபனை மாற்ற வேண்டும் என சுவாமி சங்கரதாஸ் அணியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நடிகர் சங்க தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றனர்.
இருதரப்பினரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒருவரின் மீது ஒருவர் சரமாரியான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.இந்நிலையில் சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த பாக்கியராஜ் , கணேஷ், பிரசாந்த் ஆகியோர் நடிகர் சங்க தேர்தல் அதிகாரி ,ஓய்வு பெற்ற நீதிபதியுமான பத்மநாபனை சந்தித்து பேசினர். அப்போது தபால் வாக்குகளுக்கான பணிகள் தற்போது தான் தொடங்கியுள்ள நிலையில் எதிரணியை சேர்ந்த விஷால் 1100 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறியது எப்படி என கேள்வி எழுப்பினார். தேர்தல் அலுவலரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.