சாலையில் 20 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள விலை உயந்த கார்

சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டை வெள்ளாற்று பாலத்தின் அருகில் வெண்ணிற கார் ஒன்று முழுதும் மூடப்பட்ட நிலையில் 20 நாட்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து , காரின் எண்ணை வைத்து உரிமையாளரை கண்டுபிடிக்கும் கண்டுபிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்ற செயலுக்காக இந்த கார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள்.


Leave a Reply