தேன்மொழிக்கும், சுரேந்தருக்கும் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை என்ன?

நுங்கம்பாக்கத்திற்கு அடுத்துள்ள ரயில் நிலையத்தில் மற்றொரு காதல் வன்முறை நிகழ்ந்துள்ளது. சுரேந்தரால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான தேன்மொழி ரயில் முன்பு தற்கொலைக்கு முயன்ற சுரேந்தர் ஆகியோர் சென்னையிலுள்ள இரு வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

தேன்மொழிக்கும் சுரேந்தருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு இருக்கிறது. நேற்று இரவு 7.50 மணிக்கு சேத்துபட்டு ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த தேன்மொழியை சுரேந்தர் அரிவாளால் வெட்டிஇருக்கிறார். அதில் தேன்மொழியினுடைய தாடை பகுதி பிளந்து இருக்கிறது. தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. விரல் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

 

தேன்மொழி உடனடியாக கிழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேன்மொழியை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கு வந்த ரயிலின் முன் பாயந்த சுரேந்தருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. சுரேந்தர் ஆபத்தான நிலையில் ராஜீவ் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

சுரேந்தருக்கு கழுத்து எலும்பு நகர்ந்து இருப்பதால் அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சையும் அளிக்கபட்டிருக்கிறது. தேன்மொழி ஆபத்தான நிலையை தாண்டிவிட்டார், ஆனால் சுரேந்தர் ஆபத்தான நிலையிலே உள்ளார்.சுரேந்தரும் தேன்மொழியும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தேன்மொழி அரசு தேர்வு எழுதி அவருக்கு சென்னை கிழ்பாக்கத்தில் டைபிஸ்ட் ஆக வேலை கிடைத்துள்ளது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் அவர் வேலையில் சேர்ந்துள்ளார்.

 

எழும்பூரில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி வந்துள்ளார். தினமும் ரயிலில் வேலைக்கு சென்று வந்துள்ளார். சுரேந்தர் தேன்மொழியை பெண் கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். தேன்மொழி பெற்றோர் மறுத்துள்ளனர். தேன்மொழியும் சுரேந்தரிடம் பேசாமல் வந்துள்ளார். சுரேந்தர் தேன்மொழியிடம் தொடர்ந்து பேச முயற்சி செய்து இருக்கிறார்.

 

அது பலிக்கவில்லை என தெரிந்த சுரேந்தர், தேன்மொழியை கொன்று, தானும் தற்கொலை செய்யவேண்டிய திட்டத்தோடு வந்து இருக்கிறார். நேற்று இரவு அவரை சந்தித்தபோது மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தேன்மொழியை சரமாரியாக வெட்டியுள்ளார்.


Leave a Reply