பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனைகளில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்து உள்ளது.முஷாபர்பூர் உள்ள மருத்துவமனைகளில் இரு வாரங்களுக்கு முன் 250 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டன. இதில் கிரிஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 52 குழந்தைகளும் , தனியார் மருத்துவமனையில் 15 பெரும் மூளைக்க்காய்ச்சல் பாதிப்பிற்கு பலியாகி உள்ளனர்.
உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்ததாக மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து குழந்தைகள் உயிரிழந்து வருவதால் நிலைமையை சோதிக்க மத்திய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.