சரக்கு வாகனம்-டூவீலர்கள் மீது மோதியதில் அரசுப்பள்ளி ஆசிரியர் உட்பட இருவர் பலி!சரக்கு வாகன டிரைவருக்கு வலை வீச்சு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள விஜயநகரம்,தேக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சரக்கு வாகனம் இரு வேறு இடங்களில் டூவீலரில் மோதியதில் அரசுப்பள்ளி ஆசிரியர்,பெட்ரோல் பங்க் ஊழியர் சந்துரு உள்ளிட்ட இருவர் பலி.மதுபோதையில் சரக்கு வாகனத்தை இயக்கிய டிரைவர் குமாரை காரமடை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

 

கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள மூக்கனூரை சேர்ந்தவர் குமார்.இவர் டிரைவராக பணியாற்றி வருகிறார்.இவர் காரமடையை அடுத்துள்ள குமரன்குன்று பகுதியில் நடந்த விஷேசத்தில் இருந்து பாத்திரங்களை எடுத்துக்கொண்டு சரக்கு வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தார்.அப்போது,மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் மருதூர் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக பணிபுரிந்து வரும் சந்துரு என்பவர் தனது சொந்த ஊரான வெள்ளியங்காட்டில் இருந்து விஜயநகரம் அருகே வந்து கொண்டிருந்தார்.இந்த நிலையில் மதுபோதையில் வந்து கொண்டிருந்த டிரைவர் குமார் விஜயநகரம் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையின் வளைவில் திரும்பும் பொழுது எதிரே வந்து கொண்டிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர் சந்துரு மீது எதிர்பாராத விதமாக மோதியதில் பலத்த காயமடைந்துள்ளார்.

 

அருகில் இருந்தவர்கள் சந்துருவை மீட்டு கோவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், துரதிருஷ்ட வசமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் குடிபோதையில் வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய டிரைவர் குமார் சம்பவ இடத்தில் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் குமாரை தங்களது இருசக்கர வாகனத்தில் துரத்தி சென்றுள்ளனர்.

அவர்களிடமிருந்து தப்பி செல்லும் விதமாக குமார் தேக்கம்பட்டி வழியாக வாகனத்தை பதற்றத்துடனும், பயத்துடனும் வேகமாக இயக்கியுள்ளார்.அப்போது,வனபத்ர காளியம்மன் கோவில் அருகே காரமடை நீரேற்று நிலையம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது எதிரே டூவீலரில் வந்து கொண்டிருந்த அரசுப்பள்ளி ஆசிரியர் தேக்கம்பட்டியை சேர்ந்த நடராஜன் மீது மோதியதில் ஆசிரியர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

அப்போது,சரக்கு வாகனம் தலைகீழாக குப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் டிரைவர் குமாருக்கு பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்,எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல் தெரியவில்லை என்றும் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

இந்த நிலையில் இரு விபத்துக்களை ஏற்படுத்தி இருவர் உயிரை பறித்த குடிகார டிரைவர் குமார் மீது வழக்குப்பதிவு செய்த காரமடை காவல் துறையினர் குற்றவாளியை வலைவீசி தேடி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த நடராஜன் தேக்கம்பட்டி கலங்கு தோட்டத்தை சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன்.இவர் சிறுமுகை எஸ்.புங்கம்பாளையம் அரசுப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு வனிதா தேவி என்ற மனைவியும்,நேவியா என்ற மகளும்,நகலன் என்ற மகனும் உள்ளனர்.ஆசிரியர் நடராஜன் கடந்த வாரம் தான் தனது மகளுக்கு சீர் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.குடிபோதையில் வாகனத்தை இயக்கி விபத்தினை ஏற்படுத்தியதில் அரசுப்பள்ளி ஆசிரியர் உட்பட இருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….


Leave a Reply