மதுரையில் வீட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

Publish by: --- Photo :


மதுரையில் வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் இளைஞருக்கு பலத்த தீக்காயம் ஏற்ப்பட்டது. மதுரையில் ஒரு பகுதியில் வசிக்கும் குமார் என்பவரின் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது.

 

இதனை குமாரின் மகன் பெத்துராஜ் சரி செய்யமுயன்ற போது திடீரென சிலிண்டர் வெடித்து தீ பற்றியது. பெத்துராஜ் உடலில் தீ பற்றியதில் அவர் படுகாயம் அடைந்தார். எரிவாயு கசிவால் பெத்துராஜ் தாயாருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர்களை மீட்க வந்த ஆம்புலன்ஸ் ஊழியருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.