தலைகீழாக நின்று அம்பு எய்து பள்ளி மாணவன் சாதனை

விருதுநகரில் 10 ஆம் வகுப்பு மாணவன் காலால் அம்பு எய்வதில் உலக சாதனை படைத்துள்ளார். விருது நகரில் உள்ள நோபல் மெட்ரிக் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஷ்யாம் கணேஷ் இன்று அப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லிங்கராசனம் முறையில் கைகளை கீழே ஊன்றி வில் போல் வளைந்து நின்று தனது காலால் அம்புகளை எய்தார்.

 

14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை ஒரு நிமிடம் 30 வினாடிகளில் 3 சரியாக அம்பால் தாக்கினார். ஏற்கனவே சீனாவைச் சேர்ந்த பெண் இவ்வாறு தலைகீழாக வளைந்து நின்று 4 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை ஒரு முறை தாக்கியுள்ளதே உலக சாதனையாக இருந்தது. தற்போது ஷ்யாம் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

 

அவரது இந்த சாதனையை நோபல் ரேகார்ட்ஸ் அமைப்பை சேர்ந்த குழுவினர் பதிவு செய்துள்ளனர். தமது 5 வயதிலிருந்து யோகாசனம் செய்து வரும் ஷ்யாம் யோகாசனத்தில் 3 முறை தேசிய அளவில் தங்க பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply