கரூரில் காவிரி குடிநீருடன், கழிவு நீர் கலந்து வருவதாக புகார்!

கரூரில், காவிரி குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாக கூறி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கரூர் நகராட்சி 27 வது வார்டிற்கு உட்பட்ட பகுதிகளில் வழங்கப்படும் குடிநீரானது சாக்கடை நீர் கலந்து துர்நாற்றத்துடன் வருவதாக கூறினர்.

 

இதனை கண்டித்து லட்சுமி ராம் திரையரங்கம் அருகே பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர் அங்கு வந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்த நிலையில் மறியல் கைவிடப்பட்டது.


Leave a Reply