கார் செட் காவலாளி வெட்டி கொலை

நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டியில் காவலாளி வெட்டிக்கொல்லபட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.எரியாம்பட்டியை சேர்ந்த பழனி முதலைப்பட்டியில் உள்ள கார் செட்டில் காவலாளியாக பணிபுரிந்து வந்தான். நள்ளிரவில் பணியில் இருந்த அவரை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

 

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கடந்த ஆண்டு கார் செட் உரிமையாளர்களில் ஒருவரான மாதேஷ்வரன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியாக பழனி இருந்ததால் அந்த சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் அவரை கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


Leave a Reply