100 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்தல் கமிஷன் தருவதாக மோசடி

Publish by: --- Photo :


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 100 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்தால் கமிஷன் தருவதாக கூறி மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காட்டை சேர்ந்த மோகன் என்பவர் தனியார் ஆரம்ப பள்ளி வைத்து நடத்தி வருகிறார்.இவருக்கு தெரிந்த ஒருவர் மூலம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய இருவர் தங்களிடம் 100 ரூபாய் நோட்டுகள் அதிகம் இருப்பதாகவும், அதனை 2000 ரூபாய் நோட்டுகளாக மாற்றி கொடுத்தால் 20 சதவீதம் கமிஷன் தருவதாக கூறியுள்ளனர்.

 

இதனை நம்பிய மோகன் 3.5 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்துக்கு சென்றுள்ளார். அங்கு காரில் வந்த இருவர் மோகனிடம் பணத்தை வாங்கி கொண்டு அவரை இறக்கி விட்டு சென்றுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்திய ராசிபுரம் போலீசார் போலி பெயரில் மோசடி செய்த ஈரோட்டை சேர்ந்த சுனில் குமார், கள்ளக்குருச்சியை சேர்ந்த கோபு ஆகியோரை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.


Leave a Reply